டக்ளஸ் எம்.பியின் கேள்விக்கு அமைச்சர் கயந்த கருணாதிலகவின் பதில்

வட மாகாணத்திலுள்ள அனைத்து காடுகளும் அழிக்கப்படுவதை தடுப்பதற்காக சுற்றுநிரூப ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளதாக, அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா முன்னதாக ஜனாதிபதியிடம் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்த கேள்விக்கு, ஜனாதிபதி சார்பில் நேற்று பதில் வழங்கிய போதே அமைச்சர் இதனை தெரிவித்ததுடன், வட மாகாணத்தில் காடுகளை அழிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தவும், அவற்றை உரிய முறையில் பாதுகாக்கவும், நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் ஏதாவது காடழிப்பு செயற்பாடுகள் இடம்பெறுகின்றதா? என்பது தொடர்பில் ஆராய மார்க்கமாக அவதானிக்குமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய, வான் படையினரும் வனபாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து செயற்படுகின்ற நிலையில், காடழிப்பு செயற்பாடுகள் ஏதேனும் இடம்பெறுமாயின் அது குறித்து, வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

வடக்கின் அனைத்து வனப்பகுதிகளும், காணிகளும் ஜீபிஎஸ் எனப்படும் பூகோள இடநிலை அமைப்பு தொழில்நுட்பம் ஊடாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தின் வனப்பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் விஷேட திடீர் சுற்றிவளைப்பு பிரிவு ஒன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமாக காடழிப்பு செயற்படுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வனபாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் அனைத்து வனப்பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக, காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட அவர்களால் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு