சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி

மட்டக்களப்பு, கித்துள் காட்டுக்குள் மிருக வேட்டைக்காக சென்றவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கருப்பையா ராமகிருஷ்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்றிரவு சட்டவிரேதமான உள்ளுர் துப்பாக்கியுடன் மிருக வேட்டைக்குச் சென்ற போது அவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவரின் தொடைப் பகுதியில் குண்டு பாய்ந்ததை அடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில், செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு