டெங்கு பரவும் அபாயம்

நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்ப்பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பொது வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்ததுடன், வாரமொன்றில் 200 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18,000 பேர் வரையில் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு