புலிகளைக் கட்டுப்படுத்திய உதவிகள் தொடர்பான 200 ஆவணங்கள் அழிப்பு

பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் தொடர்பான விபரங்கள் அடங்கிய சுமார் 200 ஆவணங்களை (கோப்புகள்) அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்.ஐ 5 (இராணுவ புலனாய்வு பிரிவு – 5) மற்றும் எஸ்.ஏ.எஸ் (விஷேட வான் சேவை) ஆகிய அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் குறித்த கோப்புகளில் காணப்பட்டதாகவும், இந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டதால், இலங்கையில் நடைபெற்ற மிகக் கொடூரமான யுத்தத்தின் ஆரம்ப காலத்தில், பிரித்தானிய மற்றும் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியமை தொடர்பான, எந்தவொரு பதிவுகளும் இல்லாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொது ஆவணங்கள் சட்டத்தின்படி, அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளபோதிலும், இந்த ஆவணங்கள் பாதுகாக்கத் தேவையற்றவையென பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு