இலங்கைக்கு எதிராகச் செயற்படவில்லை – சீனா

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இலங்கைக்கு எதிராக தாங்கள் கடன்புத்தக இராஜதந்திர முறைமையை கையாளவில்லையென சீனாவின் இலங்கைக்கான தூதுவர் செங் க்சியேயோன் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்காக ஹவார் பல்கலைக்கழக நிபுணர்களால் இரகசிய அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டதாகும், இதில் இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளை இலக்கு வைத்து சீனா கடன்புத்தக இராஜதந்திரத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்திருப்பதாகவும் கூறப்பட்டு, கடன்களை வழங்கி குறித்த நாடுகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த விடயத்தை முற்றாக மறுத்துள்ள சீனத்தூதுவர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா வழங்கியுள்ள கடன்கள், அந்தந்த நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை அடிப்படையிலானவையென தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த கடன்களுக்கான வட்டி வீதம் சந்தையின் நிலவரத்துக்கு அமைய நிர்ணயிக்கப்பட்டது என்பதுடன், பெரும்பலான கடன்கள் சலுகை காலத்துடனேயே வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.