சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு பெறப்படும் – மஹிந்த

அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக தமது தரப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தாக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில், குறித்த குழுவினர் ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளனர். இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, குறித்த விடயம் தொடர்பில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு