திருமலை வளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் (Photos)

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை, அநுராதபுரம் சந்தியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இவ்வார்ப்பாட்டம், நடைபவனியாக தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று, மீண்டும் அபயபுரம் முச்சந்திக்கு வந்தடைந்தது.

தங்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருவதாகப் பல தடவைகள் உறுதிமொழி வழங்கியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனத் தெரிவித்தே மாணவர்கள், இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு