ரத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தெஹிவளை, கல்கிஸை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை என்று தெரிய வந்துள்ளது.
நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூன்று பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை உயிரிழந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல் தெரியவில்லை என்றும் கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை தந்தையின் உயிரிழப்பு காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார்.