புதையல் தோன்றுவதற்கு முயற்சி செய்தவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் ஏழு பேர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கல்மடுவிலுள்ள காணி ஒன்றில் பூஜை ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் மூவர் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய நால்வரும் கொழும்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கேரளாவை சேர்ந்த மூவரிடமும் கடவுச்சீட்டோ அல்லது விஸாவோ இல்லை எனவும், ஆரம்பகட்ட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் சந்தேக நபர்களை இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் தர்மபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.