ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் செயற்பாடு திருப்தியளிக்கவில்லை

கடந்த அரசாங்கத்தின் ஊழல்வாதிகளையும் திருடர்களையும் பிடிக்க தவறியமையால் இன்று வீரர்கள் திருடர்களாகவும் திருடர்கள் வீரர்களாகவும் மாறியுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (29) கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற ‘கமே பன்சல கமட சவிய’ என்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், திருடர்களை பிடிப்போம் என்று ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றவில்லை. திருடர்களை பிடிக்கவே, மக்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதிகாரத்தை வழங்கினார்கள், ஆனால் அதை இன்னும் ஜனாதிபதியும் பிரதமரும் நிறைவேற்றவில்லை. இது நாட்டுக்கு துரதிஷ்டமே. அதனால்தான் இன்று திருடர்கள் வீரர்களாகவும் வீரர்கள் திருடர்களாகவும் உள்ளனர் என்றும் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு