கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுதுடுவாவ சந்தி பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கேரள கஞ்சா விநியோகத்தில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது, 24 கிலோவும் 180 கிராம் நிறையுடைய 29 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், திருதோப்பு, பேசாலை பிரதேசத்தைச் சேர்ந்த 27 மற்றும் 24 வயதுகளையுடைய இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு