இ.போ.ச சேவை அதிகரிப்பு

ரயில்வே தொழிற் சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்படும் பயணிகளின் நலனைக் கருத்திற் கொண்டு இலங்கை போக்குவரத்து சபை மேலதிக சேவைகளை முன்னெடுத்துள்ளது.

நாளாந்தம் இலங்கை போக்குவரத்து சபை வழமையாக 5,400 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துகின்றது. பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக இத்தொகையை 5,700ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

ரயில் ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் இலங்கை போக்குவரத்து சபை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு