வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

தென் மாகாணத்தில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சலை விரைவாக கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் பரவுகின்ற வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 13 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், வயது வந்தவர்கள் சிலரும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போது அந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தென் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு