ஆஸியில் 115 பேர் தடுத்துவைப்பு

அவுஸ்திரேலியாவிலுள்ள அகதிகள் தடுப்பு முகாமில் 115 இலங்கையர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அகதிகள் பேரவையின் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி, ரேடியோ நியுசிலாந்து தகவல் வெளியிட்டுள்ளது.

அவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும், சராசரியாக அகதி ஒருவர் 416 நாட்களை தடுப்பு முகாம்களில் கழித்திருப்பதாகவும், பலர் 826 நாட்களுக்கு மேலாக தடுப்பு முகாம்களில் இருப்பதாகவும், அவர்களது விஸா விண்ணப்பங்கள் குறித்த விசாரணைகள் தாமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், சமூக தடுப்பு முகாம்களில் 41 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விலாவுட், கிறிஸ்மஸ் தீவு மற்றும் யோங்கா மலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் அவர்கள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு