ஜோர்தான் பிரதமர் பதவி விலகல்

ஜோர்தானின் புதிய வருமான வரிச்சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஹானி அல் முல்கி பதவி விலகியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்புடன் பிரதமரால் கொண்டுவரப்பட்ட வருமான வரிச்சட்டம் நாட்டு மக்களை வெகுவாக பாதிப்பதாக தெரிவித்து, கடந்த நான்கு நாட்களாக அந்நாட்டில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதுடன், பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை பதவி விலகுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நாட்டின் அமைதியை கருத்திற்கொண்டு பிரதமர் பதவி விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு