சமூக வலைத்தளத் தடையால் இத்தனை நஷ்டமா?

இலங்கையில் சமூக வலைத்தளமான பேஸ்புக தடை செய்யப்பட்டமையினால் பல பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதியில் இருந்து 15ஆம் திகதி வரை இலங்iயில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன.

இந்த தடை காரணமாக இலங்கை பொருளாதாரத்திற்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உலக புகழ்பெற்ற அமைப்பான நெட் ப்லொக்ஸ் என்ற அமைப்பின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை இலங்கை நாணயத்தில் 4.7 பில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தடை காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணிக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், வெளிநாடுகளுக்கு இணைய அழைப்பு மேற்கொள்ள முடியாமல் போனமையினால் வெளிநாட்டு அழைப்புகளுக்காக பாரிய அளவு செலவிடப்பட்டுள்ளதாகவும், இந்த நஷ்டங்கள் அனைத்தும் இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் நெட் ப்லொக்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு