யாழ். பல்கலையில் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 33ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி எதிர்வரும் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ். பல்கலைக்கழக கைலாசிபதி கலையரங்கில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

07 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் கலை, மருத்துவ, விஞ்ஞான, பொறியியல் மற்றும் பட்டப்பின் கற்கைகள் பீடங்களைச் சேர்ந்த 1,223 உள்வாரிப் பட்டதாரிகளும், 43 டிப்ளோமாதாரிகளும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கவுள்ளதுடன், யாழ் பல்கலைக்கழகத்தின் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தைச் சேர்ந்த 440 வெளிவாரிப் பட்டதாரிகளின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்படவுமுள்ளன.

மொத்தமாக இம்முறை 1,706 பட்டங்கள் வழங்கப்படவுள்ளதுடன், சகல கற்கைநெறிகளுக்குமாக 34 தங்கப் பதக்கங்களும் 48 பரிசில்கள் மற்றும் புலமைப் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு