பிளாஸ்டிக் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் 50 உலக நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொலித்தீன் பைகள் மற்றும் உணவு பொதியிடும் பொலித்தீன் பெட்டிகள் என்பவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.