அர்ஜுன் மஹேந்திரனைக் கண்டுபிடித்துத் தருமாறு முறைப்பாடு?

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி காணாமல்போனோர் தொடர்பான பணியகத்திடம் முறையிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

அதன் இளைஞர் விவகார செயலாளர் சுகீஸ்வர பண்டார இதனைத் தெரிவித்துள்ளதுடன், அர்ஜுன் மகேந்திரன் மறைந்திருப்பதாக கூறப்படும் சில இடங்கள் குறித்த தகவல்களை பணியகத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் மகேந்திரன் காணாமல்போய் நான்கு, ஐந்து மாதங்கள் கடந்துள்ளன. அவருக்கு என்ன நடந்தது? அவர் எங்கிருக்கின்றார் என்ற தகவல்கள் இதுவரை கண்டறிய முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் மகேந்திரனை உடனடியாக கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி இன்று முறைப்பாடு செய்யவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் இளைஞர் விவகார செயலாளர் சுகீஸ்வர பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு