உதயன் பத்திரிகை மீதான டக்ளஸின் வழக்கு – நீதிமன்றின் அதிரடி உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான ஈ.சரவணபவன் அவர்களால் யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் தனியார் பத்திரிகை நிறுவனமான “உதயன் பத்தரிகை” உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு நாடாளூமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமைக்காக உதயன் பத்திரிகை நிறுவனம் 2 மில்லியன் ரூபா பணத்தினை இழப்பீடாக வழங்கவேண்டுமென யாழ். மாவட்ட நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையினை திரிவுபடுத்தி அவரால் குறிப்பிடப்படாத பெயரை (டக்ளஸ் தேவானந்தா) என்று சுட்டிக்காட்டி உண்மைக்கு மாறாக உதயன் பத்திரிகை செய்தியை வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனக்கு சமூகத்தில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதென தெரிவித்து அதற்காக உதயன் பத்திரிகை நிறுவனம் மானநஷ்டமாக 500 மில்லியன் ரூபா தொகையை இழப்பீடாக வழங்க வேண்டுமென்று கூறி யாழ். மாவட்ட நீதிமன்றில் 2013ஆம் ஆண்டு மானநஷ்ட வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

யாழ். மாவட்ட நீதிபதி ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் விளக்கம் நிறைவடைந்து மனுதாரரின் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் நேற்று (05) தீர்பளிக்கப்பட்டது. குறித்த தீர்ப்பில் குறித்த பத்திரகை நிறுவணம் 2 மில்லியன் ரூபா பணத்தை வழக்காளிக்கு வழங்க வேணடுமென தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு