தாம் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை – புட்டின்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிளவை ஏற்படுத்த ரஷ்யா முயற்சி எடுக்கவில்லையென அந்த நாட்டின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அவர் ஒஸ்ட்ரியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்த நாட்டின் ஊடகம் ஒன்றுக்கு இந்த கருத்தை வெளியிட்டிருக்கிறார். ஐக்கியமும், செல்வச்செழிப்பும் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தையே தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள புட்டின், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே ரஷ்யாவின் முக்கிய வர்த்தக மற்றும் பொருளாதார பங்காளியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு