தொழில் சேவையாளர்களுக்கான தனிச் சட்டம்?

தொழில் திணைக்களத்தின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை சேவையாளர்களின் சேவை நிபந்தனைகள், சமூக பாதுகாப்பு, தொழில் பாதுகாப்பு தொடர்பில் 61 சட்டங்கள் செயற்படுத்தப்படுவதுடன், அவற்றில் 27 மாத்திரமே பிரயோக ரீதியாக செயற்பட்டு வரும் நிலையில், அவற்றில் காணப்படுகின்ற கருத்து வேறுபாடுகள், மற்றும் மக்கள் அதனால் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளில் அவர்களை மீட்டெடுக்கும் வகையில் தனி சட்டமொன்றை தயாரிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இதில் விஷேடமாக இலங்கையின் தொழிலாளர் சக்தியை பொருளாதாரத்தின் பங்காளர்களாக இணைத்துக் கொள்வதற்கு அவசியமான சேவை நிபந்தனைகளை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

தொழிலாளர் தொடர்பில் காணப்படுகின்ற பல்வேறு முக்கிய சட்டங்களுக்கு பதிலாக சேவையில் ஈடுபடுவோர் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவிந்திர சமரவீரவால், முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு