பந்துலவுக்கு கோட்டபாய பிரதமர் பதவி வழங்கமாட்டார்

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன கதைப்பதால், அவருக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை தரப்போவதில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு தொழிற்சங்கங்களை கொண்டுவருவதற்கு சிங்கப்பூருக்கு எந்தவிதமான அவசியமும் இல்லை எனவும் இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில், நேற்றைய நாடாளுமன்ற வாய்மூல் வினாவிடை நேரத்தின்போது, பந்துல எம்.பியின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், போட் சிட்டி, ஹம்பாந்தோட்டத் துறைமுகம், சங்கிரில்லா, ஆகியவற்றை சீனாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வழங்கும்போது தங்களுக்கு கூறவில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு