கீத் நோயர் விவகாரம்: மஹிந்தவிடம் விசாரணை

ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவிரைவில் முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியான நாள் ஒன்றை அறிவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், சில விடயங்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, விசாரணையாளர்கள் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கீத் நோயர் கடத்தப்பட்ட தகவலை உடனடியாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தாமே தெரியப்படுத்தியதன் ஊடாகவே அவர் காப்பாற்றப்பட்டதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

அத்துடன், முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு