தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளிகள் பலர், தற்போதும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பாதிப்பை எதிர்நோக்கி இருப்பதாக முன்னாள் பெண் போராளிகள் பலர் வழங்கிய செவ்விகளின் அடிப்படையில் அமைந்த கட்டுரை ஒன்றில், த வொஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு பல முன்னாள் பெண் போராளிகள் சமுகத்துடன் இணைக்கப்பட்டதுடன், அவர்களுக்கு மாற்றுத் தொழிலாக தையல் இயந்திரம், கோழி வளர்ப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இருப்பினும், அவை அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வருமானத்தை பெற்றுத் தரவில்லையென முன்னாள் பெண் போராளிகள் பலர் தெரிவித்துள்ளனர்.