மேற்கிந்தியத் தீவுகளுக்கு 414 ஓட்டங்கள்

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 414 ஓட்டங்களை எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஷேன் டாவ்ரிச் ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில், இலங்கை அணி சார்பில் லஹிரு குமார 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 10 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து 33 ஓட்டங்களை பெற்றுள்ளது. சந்திமால் ஆட்டமிழக்காமல் 3 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், மெத்திவ்ஸ் 11 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு