மாவை, டக்ளஸ் போட்டி?

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா விருப்பம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதை பரிசீலிக்கத் தயார் எனவும் கடந்த மாகாண சபைத் தேர்தலில் தான் இழைத்த தவறை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் இழைக்கத் தயாரில்லை எனவும் பங்காளிக் கட்சித் தலைவர்கள் மத்தியில் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்து நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். குறிப்பாக மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளராக நான் என்னை போட்டியிடக் கோரினால் அதனைப் பரிசீலிக்கலாமென ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றேன். அவ்வாறு கோரப்படுமிடத்தே அது தொடர்பில் முடிவெடுப்பதுடன் அந்த முடிவானது கடந்த காலங்களில் இழைத்த தவறைப் போன்றதாக இருக்கவே இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஏற்கனவே ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு