திருகோணமலையில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகப் பிரதிநிதிகளின் கூட்டத்தை, தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக திருகோணமலை மாவட்ட காணாமற்போனோர் சங்கத்தின் தலைவி ந.ஆஷா தெரிவித்தார்.
திருகோணமலையில் இடம்பெறவுள்ள இவ்வமர்வைத் தாம் புறக்கணிக்கவுள்ளதுடன், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகவும், இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது, கடந்த காலத்தைப்போன்று பல பொது அமைப்புகள் ஆதரவு தரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.