இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் நிகழ்கால பொருளாதாரத்தில் தெளிவான மாற்றம் ஒன்று ஏற்பாடதவிடத்து, இலங்கையின் எதிர்காலம் கவலைக்குறியதாக மாறுமென மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் ஹப்ரால் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் ஹப்ரால் இதனை தெரிவித்துள்ளதுடன், தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனைவிட அதிக கடனை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மறுபுறத்தில் நாட்டின் சொத்துக்கள் கண்மூடித்தனமான முறையில் விற்பனை செய்யப்படுவதுடன், நாட்டின் உற்பத்தித் துறை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இந்தநிலை தொடரும் பட்சத்தில் நாடு எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் ஹப்ரால் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு