இன்று மாலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவை பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சேவையில் இணைத்துக்கொள்ளும் நடைமுறைகள் மற்றும் தபால் நிலையங்களுக்கான உப பொறுப்பதிகாரி பதவிகளுக்கான இணைப்புக்களின்போது, கண்மூடித்தனமான முறையில் நேர்முகப் பரீட்சை நடத்தப்படுதல் என்பனவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த கோரிக்கையை முன்னிறுத்தி அண்மையில் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பித்தக்கது.