பதவிகளை மாற்றுவதில் பயனில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பதவிகளை மாற்றினாலும் கட்சியை கட்டியெழுப்ப முடியாதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கலைஞர் மதுமாதவ அரவிந்தவின் புத்தகமான “மம எத்தக்” (நான் உண்மை) என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் எனவும், ஜனாதிபதி பிரதமரை குற்றம் சாட்டுகிறார், பிரதமர் ஜனாதிபதியை குற்றம் சாட்டுகிறார். அவன் கள்ளன், இவன் கள்ளன் என்று சொல்கிறார்கள். இறுதியில் பார்த்தால் 118 பேருமே கள்ளர்கள். இது நாட்டு மக்களுக்கு ஒரு தலையிடி என்றும் தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்வதே இப்போது சந்தேகத்திற்கிடமாக உள்ளது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு