கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் பிரதான எரிபொருள் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினை விரைவில் சீர்செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குழாயில் ஏற்பட்ட வெடிப்பினை இரண்டு தினங்களுக்குள் சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனம், இந்த எரிபொருள் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், இந்த எரிபொருள் குழாய் 2012ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டதாகவும், இதற்கமைய, இந்த எரிபொருள் குழாய் கொள்வனவு குறித்த விடயங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.