தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார்.

இன்று (19) சேவைக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களும் பதவி விலகியதாக கருதப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன விடுத்துள்ள விஷேட ஊடக அறிக்கையில், அனைத்து தபால் நிலையங்களிலும் சேவைகளை முன்னெடுப்பதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் நிலையங்களுக்கு இதுதொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், தபால் நிலையங்களின் தபால் அதிபர்கள், பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும், அரச ஊழியர்கள் மற்றும் தபால் ஊழியர்களின் நிபந்தனைகள் மற்றும் விதிகளுக்குட்பட்டு அவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு