ஒத்துழைப்பு வழங்கிய மக்களை கைவிடமாட்டோம்

ஆட்சி மாற்றத்திற்குற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் கைவிடாதென சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளையும், வைத்திய வசதிகளையும் விஸ்தரிக்கும் நோக்கில் கடந்த மூன்று வருடகாலத்தில் 22,000 மில்லியன் ரூபா மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடகிழக்கினை இன்னும் முழுமையாக கட்டியெழுப்ப முடியவில்லை. வடகிழக்கை கட்டியெழுப்புவதில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக உழைக்க வேண்டியுள்ளது. இதற்கு இனம், மதம், மொழி கடந்து அனைவரும் ஒற்றுமையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் தான் வடகிழக்கை கட்டியெழுப்ப முடியும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும் மக்களின் தேவைகளை படிப்படியாக நிவர்த்தி செய்துவருவதாகவும், நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கை கட்டியெழுப்புவதில் கவனமாக இருந்துகொண்டு பயணிப்பதாகவும், வடகிழக்கை மட்டும் கட்டியெழுப்பவில்லை வடகிழக்கிலுள்ள பொதுமக்களின் தேவைகள், வசதி வாய்ப்புக்கள், பொருளாதாரம், வைத்திய தேவைகள், சுகாதாரப் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளை தெளிவாக ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் எண்ணத்தில் பயணிப்பதாகவும், ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறுபான்மை மக்களை நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு