டெல்லியில் வாயுக்கசிவு – 200 மாணவர்கள் பாதிப்பு

டெல்லியின் துல்லக்பாத் பகுதியிலுள்ள பாடசாலை அருகே வாயுக்கசிவு ஏற்பட்டதில் சுமார் 200 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.

டெல்லியிலுள்ள துல்லக்பாத் பகுதியில் விடுதியுடன் அண்மித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்களே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். இன்று காலை மாணவர்கள் வகுப்பறையில் இருந்தபோது குறித்த பகுதியில் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், நச்சுவாயு கலந்த காற்றை சுவாசித்த சுமார் 200 மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர். இதையடுத்து, மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு