கிழக்கில் 136 வீடுகளுக்குச் சேதம்

கிழக்கு மாகாணத்தில் வீசிய பலத்த காற்றினால் 136 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் நிவாரணங்களை வழங்குவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்ததுடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடும் காற்று வீசியதாகவும், மூன்று மாவட்டங்களிலும் 136 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் வீசிய கடும் காற்றினால் மரங்கள் சில முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு