எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரண்டாவது கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதன் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பாரென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல பிரஜைகளின் முழு ஆதரவுடனும் இந்த பொறுப்பு வழங்கப்படும் எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து அவர் விலகுவார் என்றும் ரோஹித அபேகுணவர்த்தன மேலும் தெரிவித்துள்ளார்.