புதிய எரிபொருள் வகை அறிமுகம்?

செய்திகள் முக்கிய செய்திகள் 1

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு நன்மைளிக்கும் வகையில் புதிய எரிபொருள் வகை, விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிதாக 13 பொறியியலாளர்களை உத்தியோகபூர்வமாக இணைத்து கொள்ளும் நிகழ்வின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், கடந்த காலத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய தேவையிருந்ததாகவும், தாம் அதை விரும்பிச் செய்யவில்லை. ஆனால் சில நெருக்கடி நிலையை தவிர்ப்பதற்காகவே எமது விருப்பதற்திற்கு மாறாக செயற்பட வேண்டியிருந்தமையால், பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரிய நிலை தொடர்பாகத் தாம் அறிந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது பொதுமக்களுக்கு எவ்வாறு வேறுவழிகளில் நிவாரணங்களை வழங்கலாமென ஆலோசித்து வருவதாகவும், அதற்கமைய பொருளாதார ரீதியாக நிவாரணம் வழங்கும் முகமாக முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்காக எரிபொருள் சந்தையில் புதிய பெற்றோல் வகையை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் பரிசோதனை நடவடிக்கைகள் வெற்றியளிக்குமென தாம் நம்புவதாகவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.