மல்லாகம் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: விளக்க அறிக்கை கோரியது மனித உரிமை ஆணைக்குழு

யாழ்ப்பாணம், மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடமிருந்து சம்பவம் தொடர்பில் விளக்க அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பணிப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்ததுடன், இதற்கமைய, விசாரணைக்கு பொறுப்பான அதிகாரியான காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் உதவி கண்காணிப்பாளரிடம் குறித்த விளக்க அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்து சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகத்துக்குரியவர்களிடம் சிங்கள மொழியில் பெறப்பட்ட வாக்குமூலத்தில் முரண்பாட்டு நிலைமை உள்ளதாக பொறுப்பதிகாரியிடம் நேற்று தாம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, தமிழ் மொழியில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட பணிப்பாளர் கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு