பெற்றோல் தட்டுப்பாடா?

நாட்டினுள் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொய்ப் பிரசாரம் பரப்பப்பட்டுள்ளதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு தட்டுப்பாடு இல்லை என்றும் மக்கள் வீணாக குழப்பமடைய தேவையில்லை என்றும் அதன் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளதுடன், பெற்றோல் விநியோகம் செய்கின்ற தனியார் பவுசர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பெற்றோல் விநியோகத்தில் தடை ஏற்படலாமென பொய்ப் பிரசாரம் பரவிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்கின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நீல் ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு