யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, சுழிபுரம் பிரதேசத்தில் 06 வயது சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காட்டுப்புலம், சுழிபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டு, வட்டுக்கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 22 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.