தமிழகத்திலிருந்து தாயகம் திரும்ப தமிழர்கள் தயார்

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள், நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து, அதிகளவில் விண்ணப்பித்து வருவதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில், இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தமிழகம் சென்ற அகதிகளுக்காக அங்கு 119 முகாம்கள் அமைக்கப்பட்டு, அதில், சுமார் 67 ஆயிரம் பேர் தங்கியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தவிர, பொலிசார் அனுமதியுடன், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் உள்ளதாகவும், 2009 மே மாதம், உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததும், ஒரே சமயத்தில் 5,000 பேர் இலங்கைக்கு சென்றனர்.

தற்போது, இலங்கையில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாலும், அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதாலும், தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல, அகதிகள் ஆர்வம் காட்டி வருவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், 46 பேர் இலங்கைக்கு சென்றனர். அதேபோல், ஏராளமானோர் தங்கள் நாட்டிற்குச் செல்ல தொடர்ந்து விண்ணப்பித்து வருவதாகவும், இதில், 2006க்கு பின் வந்தோர் தான், தாயகம் செல்ல அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு