வடக்கு முதல்வர் – த.தே.கூ முறுகல்

வடக்கு மாகாண முதலமைச்சரின் செயற்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாகவுள்ளதென அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதுடன், விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்து விட்டதாகவும், அதனாலேயே, தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது, பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகிறது. எனவே, முன்னர் இழைத்த அந்தத் தவறை மீண்டும் இழைக்கத் தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இராணுவத்தினருக்கு நாட்டின் எந்த பகுதியிலும், முகாமிட உரிமையுள்ளதாவும், இந்த நிலையில், வடக்கில் அவ்வாறு செய்ய முடியாதென யாராலும் கூறமுடியாது என்ற போதிலும், இராணுவத்தின் 16 பிரிவுகளில் 13 பிரிவுகள் வடக்கிலேயே நிலைகொண்டுள்ளதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு