விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக வரிவிலக்குகள்

விளையாட்டுத் துறையின் மேம்பாட்டுக்காக வரிவிலக்குகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதுடன், விளையாட்டின் ஊடாக சிறந்த ஒழுக்கமிக்க, பொறுமையான, ஆரோக்கியம் மிக்க மற்றும் முன்னுதாரணமிக்கவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.

எனவே, விளையாட்டு என்பது வெற்றிக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட விடயம் அல்ல. அதற்கு அப்பால் பரந்த அர்த்தமுள்ள துறையாகும். அதற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அரசாங்கம் என்ற அடிப்படையில், விளையாட்டுத்துறை அமைச்சுடனும், கல்வி அமைச்சுடனும் இணைந்து பிள்ளைகளுக்காக உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு