உள்ளூராட்சி அமைச்சருடன் பெப்ரல் விரைவில் சந்திப்பு

சிவில் சமூக அமைப்பு என்ற அடிப்படையில் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சரை எதிர்வரும் 5ஆம் திகதி சந்திக்க தாம் எதிர்பார்ப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது வரையான காலப்பகுதியில் பெப்ரல் அமைப்பு பல்வேறு தரப்பினருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் இனங்காணப்பட்ட பிரச்சினைகள் குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதுடன், அதற்காக அமைப்பு முன்வைக்க எதிர்பார்க்கின்ற யோசனைகள் குறித்தும் அமைச்சரைத் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான அறிக்கையை ஜுலை மாதம் 15ஆம் திகதி அளவில் அமைச்சரிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு