தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு நடக்குமா ? நடக்காதா?

அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர் சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. அந்த சங்கத்தின் மேல் மாகாண பிரதான அமைப்பாளர் யூ.கே குமாரரத்ன ரேணுக இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அபராத பத்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அபராத பத்திரம் மூலம் பேருந்து சாரதிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த போராட்டத்திற்கு தமது சங்கம் ஒத்துழைப்பு வழங்காது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது .
மேலும் அவர்  கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இடம்பெற்று வருவதன் காரணமாக பணிப்புறக்கணிப்பு குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு