வடக்கில் எனிவரும் காலத்தில் போர் நடக்க விடமாட்டேன் சிங்கள தமிழ் மக்களின் இரத்தங்கள் ஒன்றேதான் – குரே

வடக்கில் ஆங்காங்கே ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நாட்டில் இனிமேல் போர் நடைபெற இடமளிக்கப்படமாட்டாது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் நடந்த நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கில் படையினர் பயங்கரமான போரை முடிவுக்குக் கொண்டுவந்து இன்று அமைதியான படையினராக மாறியுள்ளனர்.

வடக்கில் மருத்துவமனைகளிலுள்ள குருதி வங்கியைத் தமது குருதியால் நிரப்புபவர்கள், முப்படை மற்றும் பொலிஸார் ஆகிய சிங்கள அதிகாரிகள்.

மருத்துவமனையில் சேர்க்கப்படும் தமிழ் மக்களுக்குச் சிங்கள இனத்தவரின் குருதி கொடுக்கப்பட்டால், அங்கு, தமிழ், சிங்கள குருதிக் கலப்பு ஏற்படாதா? என்று நான் வடக்கின் அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்புகிறேன்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு