எந்த ஒரு ஆணைக்குழுவாலும் பயன் இல்லை

அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற வேதன ஆணைக்குழுவால், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது என தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரச துறையினரின் வேதன அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை போக்கும் நோக்கில் புதிய வேதன ஆணைக்குழுவை அமைக்கும் யோசனைக்கு அமைச்சரவை, கடந்த செவ்வாய் கிழமை அனுமதியளித்தது.

எவ்வாறாயினும் அந்த ஆணைக்குழுவின் ஊடாக தொடரூந்து தரநிலைகளில் காணப்படும் முரண்பாடுகளை நீக்க முடியாது என தொடரூந்து கட்டுப்பாட்டாளா்களின் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவினால் வேதன முரண்பாடுகளை தீர்க்க முடியும்.

எமக்கு எப்போதுமே வேதன உயர்வு தேவையில்லை.

தரநிலைகளின் முரண்பாடுகள் குறித்த தீர்வு காணுவது தொடர்பில் குறித்த ஆணைகுழுவின் பணிகளில் குறிப்பிடபட்டிருக்க வில்லை.

இந்தநிலையில் குறித்த ஆணைக்குழுவினால் தமக்கு தீர்வு பெற்றுகொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு