நல்லூரில் பனை வளக்கைத்தொழில் பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு

நல்லூரில் நவீன கற்பகம் சிறப்பு அங்காடி விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பனை அபிவிருத்திச் சபையின் 40 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நவீன கற்பகம் சிறப்பு அங்காடி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் வைத்தியகலாநிதி சி.சிவசங்கர் தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு இடம்பெற்றது பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் பாக்கியநாதன் தம்பதிகள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தனர்.

1980 ஆம் ஆண்டில் சிறியதொரு கற்பகம் விற்பனை நிலையமாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்கருகில் இந்த விற்பனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மோதல்கள் காரணமாக விற்பனை நிலையம் இயங்கவில்லை.

பனம் உணவு உற்பத்திப் பொருட்கள்,அழகிய பனம் கைப்பணிப் பொருட்கள், பனை மரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சிற்பப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் இடம்பெற்றுள்ளன.முற்றுமுழுதாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சுவைமிக்க பனம் பானங்கள்,ஐஸ் கிறீம் மற்றும் சுவைமிக்க உணவுப் பொருட்கள் என்பன இங்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு