கிளிநொச்சியில் கல்வியல் கல்லூரி மாணவி கிருமித்தொற்றால் மரணம்!!

கிளிநொச்சி கல்வியல் கல்லூரி மாணவி இருதயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக  உயிரிழந்துள்ளார்.

இவர் கிளிநொச்சி விசுவமடு மேற்கை சேர்ந்த 23 வயதான சிவலிங்கம் ஜிந்துஜா எனும் மாணவியே உயிரிழந்தவராவார்.

இவ் மாணவி அழுத்கம கல்வியல் கல்லூரியில் 2 ஆம் வருடத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.  மாணவி கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் திடீரென மாணவி சுகவீனமுற்றதை அடுத்து மாணவி வீட்டாரிடம் கல்வியல் கல்லூரி நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மாணவியை வீட்டார் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி நேற்று முன்தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நா. பிரேம்குமார் மாணவியின் இருதயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

 

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு